போதிய வருமானம் இல்லாத 12 ஆயிரத்து 959 கோவில்களில் ஒருகால பூஜை நடைபெற ஏதுவாக 129 கோடியே 59 இலட்ச ரூபாய் வைப்புநிதிக்கான காசோலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஒருகால பூஜை நடைபெறுவதற்காக ஒவ்வொரு கோவிலுக்கும் ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்பட்டுள்ளது. அந்த வைப்பு நிதியை இரண்டு இலட்ச ரூபாயாக உயர்த்தி அதற்கான காசோலையைத் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்ய அந்நிறுவனத்தின் தலைவர் அதுல்ய மிஸ்ராவிடம் முதலமைச்சர் வழங்கினார்.
இதன்மூலம் கோவில்களுக்குக் கூடுதலாக வட்டித் தொகை கிடைக்கப் பெறுவதால் பூஜைப் பொருட்களைத் தேவையான அளவு வாங்கிப் பூஜை செய்வதில் நிறைவான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.