ஜெயலலிதாவின் வேதா இல்லத்தைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரித் தீபாவும் தீபக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு நகலை இணைத்துச் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்தியது செல்லாது எனத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், சட்டப்படியான வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் மூன்று வாரங்களுக்குள் ஒப்படைக்க உத்தரவிட்டது.
அதன்படி தங்களிடம் வீட்டை ஒப்படைக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோர் தீர்ப்பு நகலை இணைத்துச் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியிடம் இன்று மனு அளித்தனர். அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவு செய்வதாக அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.