காஞ்சிபுரத்தில் பணம் கேட்டு மிரட்டி சூப்பர் மார்க்கெட், பெட்டிக் கடையை அடித்து நொறுக்கிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 17-ஆம் தேதி பெரிய காஞ்சிபுரம் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட், பெட்டி கடையில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி தப்பியோடினர்.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜெமினி, ஜெகன், அருண், பிரசாந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.