மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 14 நாட்களாக 120 அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் 22 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
காலையில் அணைக்கு நீர்வரத்து 26ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் படிப்படியாகக் குறைந்தது. அணையில் இருந்து சுரங்க மின் நிலையம் வழியே 17 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியே 5 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்குக் கால்வாய்களின் பாசனத்துக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 6 டி.எம்.சி. ஆக உள்ளது.