சேலம் கருங்கல்பட்டி பகுதியில் 6 பேரை பலி வாங்கிய சிலிண்டர் வெடிவிபத்து நிகழ்ந்த பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்து, 6 பேர் பலியாகி, 12 பேர் காயமடைந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த 12 பேரையும் நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும்போது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், வீடுகளை இழந்தோருக்கு அரசு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.