புதுக்கோட்டையில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல நடித்து தொடர் பண மோசடியில் ஈடுபட்ட வந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
கீழராஜ வீதியில் உள்ள ஏடிஎம்மில் சதாசிவம் என்ற முதியவர் பணம் எடுக்கச் சென்ற போது அவருக்கு உதவுவது போல நடித்து ஏடிஎம்-க்குள் சென்ற இளைஞன் ஒருவன், முதியவருக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, போலியான கார்டை அவரிடம் கொடுத்துள்ளான்.
பிறகு, சதாசிவத்தின் கார்டை பயன்படுத்தி கடைகளில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டு பணத்தையும் எடுத்துள்ளான். தனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 80ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்த முதியவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், காட் ஜான் என்ற அந்த இளைஞனை கைது செய்தனர். விசாரணையில், பல இடங்களில் அவன் இதே போன்று மோசடி செய்தது தெரியவந்தது.