சென்னை வேளச்சேரியில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சுச்சரித்தா என்பவருக்கு சொந்தமான 4 பிளாட்டுகளை விற்று தருவதாக கூறி பொது அதிகாரம் பெற்று, அதை 2 கோடியே 47 லட்ச ரூபாய்க்கு விற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்து தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்தனர்.
வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பைனான்சியர் அங்கப்பனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.