திருப்பூரில், வீடு கட்ட சேமித்து வைத்திருந்த, ஐந்து லட்சம் ரூபாயை, ஆன்லைன் ரம்மியில் இழந்த நபர் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் - பாளையக்காடு, ராஜமாதா நகரை சேர்ந்த சுரேஷ், கள்ளக்குறிச்சியிலுள்ள தனது நிலத்தை விற்று புதுவீடு கட்ட, ஐந்து லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தார். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து, புதுவீடு கட்டும் இடத்தில் போர் இணைப்பும் போட்டிருந்தார்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான சுரேஷ் சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை, rummy culture என்ற செயலியில் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் நேற்று தனது வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
சுரேஷ் இறக்கும் முன்னதாக ஆன்லைன் நிறைவனத்திடமிருந்து வந்த போனில் சுரேசை தரக்குறைவாக பேசியதாகவும், உயிரிழந்த பின்பும் கூட பணம் கட்டுமாறு தொடர்பு கொண்டு பேசுபவர்கள் தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் சுரேஷின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.