தமிழகத்தில் இந்த ஆண்டிற்குள் 100 தடுப்பணைக்கள் கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அடுத்த மேல்பாடி பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் மற்றும் வெள்ள சேதங்களை அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், பாலாற்றில் தண்ணீரை தேக்கி வைக்க பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்டப்படும் என கூறினார்.
தமிழக்கதில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் என ஏற்கெனவே அறிவித்துள்ளதாகவும், குறுகிய காலம் என்பதால் இந்த ஆண்டிற்குள் முதற்கட்டமாக 100 தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் கூறினார்.