சென்னையிலுள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில், தக்காளி ஒரு கிலோ 79ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரத்து குறைந்ததால், வெளிச்சந்தையில் தக்காளி விலை கிலோ 180ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கூட்டுறவுத்துறை துறை சார்பில் தமிழகத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட பண்ணை பசுமை கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும், இதற்காக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் செயல்பட்டு வரும் 40-க்கும்மேற்பட்ட பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 79ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.