தொடர் மழையின் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் இடிந்து கடலில் விழுந்தது.
கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலின் வடகிழக்கு பகுதியில் கடற்கரையோரம் கான்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகளால் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தொடர் கனமழையால் உறுதித்தன்மையை இழந்த தடுப்பு சுவர் இடிந்து கடலில் விழுந்த நிலையில், பக்தர்கள் அங்கு செல்லாதவாறு தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.