ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடைகோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் மனு மீது மனுவை தாக்கல் செய்து ஆணையத்தின் செயல்பாட்டை தடுக்க அப்பல்லோ முயற்சிப்பதாக கூறினார்.
சிகிச்சையின் போது என்ன மருந்துகள் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்டது, என்ன சிகிச்சை வழங்கப்பட்டது உள்ளிட்ட அனைத்தும் வெளிப்படையாக தெரியவேண்டும் அதை தான் ஆணையம் செய்து வருகிறது, அதனால் ஆணையம் செயல்படவே கூடாது எனஅப்பல்லோ சொல்லுவதை ஏற்க முடியாது என அவர் வாதிட்டார்.