மயிலாடுதுறையில், சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து விழுந்த நிலையில், படியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் தப்பினர்.
மயிலாடுதுறையிலிருந்து பொறையார் நோக்கி அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, தரங்கம்பாடி சாலையில் திடீரென பேருந்தின் பின்பக்க படிகட்டின் ஒரு பகுதி உடைந்தது.
இதனையடுத்து, மாணவர்கள் கூச்சலிட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய நிலையில், நடுரோட்டில் உடைந்து கிடந்த படிக்கட்டின் ஒருபகுதியை நடத்துநர் எடுத்தபின், பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது.