கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40,000 ரூபாய் நிவாரணமும், மறுசாகுபடி செலவிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 12,000 ரூபாய் நிவாரணமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட ஊரக சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.