கோவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 34 ஆயிரத்து 723 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஏறத்தாழ 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. தமிழ்நாடு ஃபின்டெக் பாலிசியும், தமிழ்நாடு ஒற்றைச் சாளர செயலியும் இன்றைய நிகழ்ச்சியில் தொடங்கிவைக்கப்பட உள்ளன.