கோவையை அனைத்து துறைகளிலும் சிறந்த மாவட்டமாக மாற்ற அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க 2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 646 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பில் 25,123 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். 89 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த திட்டங்களை துவக்கி வைத்த முதலமைச்சர்,587 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.