செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாகனத் தணிக்கையின்போது விபரீதம்.. பறிபோன ஆர்.டி.ஓவின் உயிர்..!

Nov 23, 2021 03:29:31 PM

கரூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் அதிவேகமாக வந்த மஹிந்திரா மேக்சி கேப் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்கப் பிரிவில் மோட்டார் வாகன தணிக்கை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ். அலுவலக வாகனத்தில் அவ்வப்போது தனியாகச் சென்று வாகனத் தணிக்கையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

காலை வழக்கம் போல் சீருடை அணிந்து அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து அருகில் உள்ள கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக மஹிந்திரா மேக்சி கேப் வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.

வேனை நிறுத்தி தணிக்கை செய்வதற்காக எதிரே நின்று சைகை காண்பித்துள்ளார் கனகராஜ். ஆனால் தனது வேகத்தில் கொஞ்சம் கூட குறையாத அந்த வேன், கனகராஜ் மீது பயங்கரமாத மோதி தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளது. அந்த இடம் அடிக்கடி விபத்து நிகழும் இடம் என்று கூறப்படும் நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று அங்கு எப்போதும் நின்றிருக்கும் என்று கூறப்படுகிறது. வேன் மோதி தூக்கிவீசப்பட்ட கனகராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அந்த ஆம்புலன்சில் ஏற்றி அருகில் இருந்த ராஜ் ஆர்த்தோ என்ற தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் பட்ட காயத்தோடு, குற்றுயிரும் குலை உயிருமாக அங்கு அழைத்துச் செல்லப்பட்ட கனகராஜ், சிறிது நேரத்திலேயே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கணவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் மட்டும் கிடைத்து பதற்றத்தோடு வந்த அவரது மனைவி, அசைவின்றி கிடந்த கணவரின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கத்திக் கதறி அழுதது, சுற்றி இருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் கனகராஜ் மீது மோதிய வேன், டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூலி ஆட்களை அழைத்து வரும் வேன் என்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடந்தது விபத்தா அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலையா என விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து கனராஜின் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 


Advertisement
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது.!
மழையால் சேறும் சகதியுமான கிராமச் சாலை - நாற்று நட்டு மக்கள் எதிர்ப்பு
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை..
கும்பகோணத்திலிருந்து மீண்டும் காஞ்சி வந்தடைந்த ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள் .!
வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கல்குவாரி ஊழியர்கள்.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement