தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் குறைந்து பின்னர் மீண்டும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெரிவித்துள்ள அம்மையம், வளிமண்டல சுழற்சி அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களில் மழையின் தீவிரம் குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனை அடுத்து, வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.