சென்னை திருவொற்றியூரில் வீட்டில் தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, தாலிச் சங்கிலியையும் செல்போனையும் பறித்துச் சென்ற இரு சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காலடிப்பேட்டையைச் சேர்ந்த அம்மாயி என்ற அந்த மூதாட்டியின் வீட்டுக்குள் நேற்று மாலை நுழைந்த அந்த மூன்று பேரும், அவரது கழுத்தைப் பிடித்து நெரித்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் அவரிடமிருந்து செல்போனையும் அவர் அணிந்திருந்த தாலிச் சங்கிலியையும் பறித்துச் சென்றுள்ளனர்.
மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய திருவொற்றியூர் போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த வசந்த் என்ற இளைஞனையும் 2 சிறுவர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கத்தி, 12 கிராம் நகை மற்றும் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.