நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜக தனித்துப் போட்டியா, அல்லது கூட்டணி அமைத்து போட்டியா, என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும், என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், விருப்ப மனுக்களை பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது, பிரதமர் மோடியின் பெருந்தன்மையை காட்டுவதாக குறிப்பிட்டார். மேலும், அதிமுகவுடனான பாஜக கூட்டணி தொடர்வதாகவும், அண்ணாமலை தெரிவித்தார்.