ஜெய்பீம் படத்திற்கு வாங்கிய சம்பள பணத்தை எழுத்தாளர் கண்மனி குணசேகரன் திருப்பி அனுப்பி உள்ளார். தான் சார்ந்த சமூகத்தை இழிவுபடுத்திய படக்குழுவினருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு வட்டார மொழிமாற்று வசனம் எழுதியவர் முதனை கிராமத்தை சேர்ந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன். அதற்கு ஊதியமாக சூர்யாவின் 2 டி எண்டர் டெயின் மெண்ட் நிறுவனம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகின்றது.
படத்தில் தான் சார்ந்த சமூகத்தின் அக்கினி கலச குறியீட்டுடன், படம் முழுவதும் நிறைய விஷமத்தனமான உண்மைக்கு புறம்பான காட்சிகளை சேர்த்து இருப்பதுடன், தன்னுடைய பெயரையே சுருக்கி, குடிசைகளை கொழுத்தி விடுவதாக மிரட்டும் ஊர்தலைவரின் எதிர்மறை கதாபாத்திரத்துக்கு, க.குணசேகரன் என்று வைத்து தன்னையும் அவமானப்படுத்தி விட்டதாக வேதனை தெரிவித்துள்ள எழுத்தாளார் கண்மணி குணசேகரன்,
உண்மை சம்பவத்தில் தான் சார்ந்த சமூகமும், ஊர் தலைவரும், பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணு குடும்பத்திற்கு துணை நின்ற நிலையில் படத்தில் தவறாக சித்தரித்தது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
எலிவேட்டை என்று எடுக்கப்பட்ட படத்தை ஒருவரரிடம் தானமாக பெற்ற தலைப்பான ஜெய் பீம் என்று பெயர் மாற்றியதோடு சம்பந்தப்படவருக்கு நன்றி நவிழ்ந்த போதே ஏன் என்ற யோசனை தோன்றியது. படத்தை பார்த்தால் அதில் தங்கள் சமூகத்தின் மீது திட்டமிட்டு செய்த சித்தரிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காலண்டர் காட்சியில் தவறு திருத்தப்பட்டு விட்டாலும் ஒட்டு மொத்த சினிமாவிலும் தனது சமூக மக்களை கொலைகாரர்களாகவும், கொடூரமானவர்களாகவும், இழிவாக சித்தரித்து இருப்பதை தனது மனம் ஏற்க மறுத்து இருப்பதாக கூறும் கண்மணி குணசேகரன், தங்கள் அண்ணன் அன்புமணி எடுத்துகூறி நியாயமாக கேட்ட கேள்விகளுக்கு, உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் , என்று உங்கள் நடிகர் சூர்யாவின் தெனாவெட்டு விளக்கத்தை தன்னால் சற்றும் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை என்று கூறியுள்ளார்.
செய்த தவறை திருத்த மனிதனாக இருந்தால் போதும், அதைவிடுத்து கலை, கலைஞன், மட்டை எல்லாம் தேவையில்லாதது என்று ஆதங்கப்பட்டுள்ள எழுத்தாளர் கண்மணிகுணசேகரன்,
25 ஆண்டுகாலம் எனது எழுத்தில் தவழ்ந்த எனது நடு நாட்டு மொழியை, எனது இனத்திற்கு எதிராகவே , என்னாலயே திருப்ப செய்து விட்ட உங்கள் ஏமாற்றும் துரோகம் எந்த படைப்பாளிக்கும் வரவேக்கூடாது.
உங்கள் இழிச்செயலால் சம்பாதிக்கிற வருமானத்தில் இருந்து, தான் பெற்ற அந்த பாவத்தின் சம்பளத்தை வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வில் துடித்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள கண்மணி குணசேகரன், வட்டார மொழி மாற்றத்துக்காக தாங்கள் கொடுத்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை உங்களுக்கே திருப்பி அனுப்பும் விதமாக காசோலை அனுப்பி வைப்பதாக குறிப்பிடுள்ளார்.
இனிவரும் காலங்களில் இது போல் துக்கிவிடு குலையில் குத்துகின்ற வஞ்சகர்களை வாழ்வில் ஒரு போதும் சந்திக்காத வண்ணம் குலதெய்வம் வழி நெடுக துணை நிற்க வேண்டும் என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டு ள்ளார்.எழுத்தாளர் கண்மணி குணசேகரன் , சூர்யாவின் 2 டி எண்டர்டெயின் மெண்ட் நிறுவனத்திற்கு அந்த காசோலையை அனுப்பி வைத்துள்ளார்.