ஆந்திராவின் கலவகுண்டா அணையிலிருந்து 50,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கானது 50 கிலோமீட்டர் வேகத்தில் முழு ஆற்றையும் ஆக்கிரமித்துவாறு ஆர்ப்பரித்து செல்வதால் கரையோர வாசிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள வள்ளிமலை, பொன்னை, மேல்பாடி தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று, குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், நகைக்கடை தெரு, காமராஜர் வீதி குடியிருப்பு பகுதிகளில் அபாயகரமாக இடுப்பளவிற்கு ஆர்ப்பரித்து சென்ற நீரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த 23 பேரை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.