கொசஸ்தலை ஆற்றின் வெள்ளத்தால், திருவள்ளூர் மாவட்டத்தில் அதன் கரையோரப் பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளிவாயல் கிராமத்தில், அறுவடைக்கு இன்னும் 30 நாட்களே இருக்கும் நிலையில், 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
மணலி புதுநகரில் காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளியில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாமலே உள்ளது. அருகேயுள்ள எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், வேலவன் நகர் பகுதிவாசிகள், இடுப்பளவு நீர் தேங்கியிருப்பதால் பாதுகாப்பு கருதி, 2 படகுகள் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.
பல கிலோ மீட்டர் தூரம் கரையே இல்லாத கொசஸ்தலை ஆற்றுக்கு, கரையை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதே, வெள்ள நீர் பிரச்னையிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, என்கின்றனர் இப்பகுதி மக்கள்.