தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இரண்டாம் நாளாக 65 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
நேற்றுக் காலையில் 55 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்றும் அதே அளவில் நீர்வரத்து உள்ளதால் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்கிறது.
நீர்வரத்து அதிகமுள்ளதால் அருவிகளிலும் ஆற்றிலும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் ஆறாவது நாளாகத் தடை நீடிக்கிறது.