ஏன் இந்தி மொழியை கற்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு, ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ள தான் என கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து அறிவிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது என்றும் மொழியை மொழியாக தான் கையாள வேண்டும் என குறிப்பிட்டனர்.
மேலும், மனுதாரர் விருப்பப்பட்டால் தமிழ் வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு துறைகளிடம் மத்திய அரசின் திட்டங்களை மொழிபெயர்த்துத் தருமாறு கோரி தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.