முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது மட்டும் அல்லாமல், கொலை முயற்சி குற்றச்சாட்டும் இருப்பதாக தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணையின்போது, இடையீட்டு மனுதாரர்கள் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி,விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.