ஏலகிரி மலைப்பாதையில் பாறையோடு மரமும் சாய்ந்ததால் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட பொன்னேரியிலிருந்து ஏலகிரி செல்லக்கூடிய பிரதான மலைப்பாதையின் 7ஆவது கொண்டை ஊசி வளைவில் மரத்தோடு, பாறையும் சாலையில் சரிந்து விழுந்ததன் காரணமாக, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் செல்லமுடியாமல் வாகனங்கள் தடைப்பட்டு போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
இதையடுத்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் பாறையை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.