கனமழை காலத்தில் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சுவர்கள், வகுப்பறைகளை மாணவர்கள் பயன்படுத்தாதவாறு இருப்பதை உறுதிபடுத்துவது, முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது, மின் இணைப்புகள் சரியாக இருப்பதை பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.
நீர்தேக்கத் தொட்டிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அருகில் செல்லாமல் இருப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.