குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று அதிகாலை கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்தே பலத்த மழை பெய்தது.
சென்னை-புதுச்சேரி இடையே நேற்றிரவு 100 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நள்ளிரவு 1.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் விட்டு விட்டு கனமழை பெய்தது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து வந்ததால் நள்ளிரவுக்கு பின்னர் மழையும் குறையத் தொடங்கியது. கடலோர பகுதிகளில் பலமான காற்று வீசியது.