முதலமைச்சர் முக ஸ்டாலினின் ஆணையின்படி, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டில்,சிலம்பம் விளையாட்டையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
மேற்படி திட்டத்தில் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபாடி, உஷீ ஆகிய விளையாட்டுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் முயற்சியின் காரணமாக மத்திய அரசின் கேலா இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.