அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்கும்படி தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
class="twitter-tweet">தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை,
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.(2/2)
அவர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், அதிமுக ஆட்சியில் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசுப் பணமும், முழுக் கரும்பும் வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம், கரும்பு ஆகியன இல்லாததையும், தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டுப் பொங்கல் பரிசுப் பணம் இல்லாததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.