முறையாக வேலை செய்யாத மருத்துவர்கள்தான் கூடுதல் பணிச்சுமை தரப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் மழைக்காலச் சிறப்புச் சித்த மருத்துவ முகாமுக்கான வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.