அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக வகுப்புகளிலேயே நடத்தப்படும் என தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் வகுப்புகள் நடத்தியதால் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த மாணவர்கள் கோரி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் தேர்வுகளை நேரடியாக வகுப்புகளில் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக்குகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகளில் நடக்கும் அனைத்து தேர்வுகளுக்கும் இது பொருந்தும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.