சேலம் அரசு மருத்துவமனையில் 250 ரூபாய் செலவில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீரிழிவு நோய் தினவிழா சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் கார்மேகம், சேலம் அரசு மருத்துவமனை நீரிழிவு துறையின் மூலமாக வருடத்திற்கு ஒரு லட்சம் புற நோயாளிகளும், ஐம்பதாயிரம் உள் நோயாளிகளும் பயன் அடைந்து வருகின்றனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.