தமிழகத்தில் பாயும் ஆறுகளின் தரத்தை கண்காணிக்க 14 இடங்களில் நிரந்தர நீர் தரக் கண்காணிப்பு நிலையம் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்ட அரசாணையில், காவிரி, பவானி, நொய்யல், தாமிரபரணி, உள்ளிட்ட 14 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நிரந்தர நீர் தரக் கண்காணிப்பு நிலையம் அமைக்க தேவையான நிலம் பொதுப் பணித் துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த ஏற்கனவே உள்ள 8 நீர் தரக் கண்காணிப்பு நிலையங்களை புதுப்பிக்கவும், குடிநீர் அல்லாத தேவைகளுக்கு பயன்படும் நீரின் தரத்தை ஆய்வு செய்ய 2 நடமாடும் கண்காணிப்பு நிலையங்கள் விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.