சென்னையில் வெள்ளநீர் தேங்குவதை தடுக்க மண்டலம் வாரியான தனி நுண் திட்டம் தயாரிக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
பொதுவான வெள்ள தடுப்பு திட்டம் குறிப்பிட்ட இடங்களில் பயனளிக்காதது குறித்து சம்மந்தப்பட்ட பகுதி பொறியாளர்கள் அறிக்கை கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பாக செயல்படுத்தப்படும் என்றும், வெள்ள பாதிப்பைத் தடுக்கும் நிரந்தரத் திட்டமாக இது இருக்கும் என்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டார்.