கோவையில் தீபாவளியன்று மது அருந்தி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவர்கள் அருந்திய மதுவில் சையனைடு விஷம் கலந்திருந்தது தெரியவந்துள்ளது.
பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன், சக்திவேல், முருகானந்தம் என்ற அந்த 3 பேரும் அருந்திய மது பாட்டில்களை தடயவியல் துறையினர் ஆய்வுக்கு எடுத்துச் சென்றிருந்தனர். ஆய்வில் அவர்கள் அருந்திய மதுவில் சையனைடு எனப்படும் கொடிய விஷம் கலந்திருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையில், உயிரிழந்த முருகானந்தனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவனுக்கும் முன்விரோதம் இருந்ததும் முருகானந்தத்தை பழிவாங்க மதுவில் சையனைடு விஷத்தை ராஜசேகர் கலந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
முருகானந்தத்துக்கு வைத்த குறியில் சம்மந்தமே இல்லாமல் அவரது நண்பர்களான பார்த்திபனும் சக்திவேலும் சிக்கி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்த போலீசார், ராஜசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.