தொடர் மழை காரணமாக ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பள்ளத்தாக்கு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலைச்சாலையின் ஒரு பகுதி சுமார் 50 அடி ஆழத்தில் விழுந்தது.
செட்டி நொடி என்ற இடத்தில் பாறைகளும் சரிந்து சாலையில் கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.