கோவையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
வீட்டைத் தூய்மையாக வைத்திருக்கவும், கைகளை அடிக்கடி கழுவவும், இருமல், தலைவலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகிச் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தியுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் நாள்தோறும் 64 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.