ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து 1 கோடியே 47 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில், இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கொடிக்குளம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளியூர் கிளையில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, இதுபோன்று கவரிங் நகைகளை வைத்து கடன் பெற்று மோசடி நடைபெற்றது அம்பலமான நிலையில், சங்க செயலாளர் இளமதியான் மற்றும் சங்க துணை செயலாளர் முருகேசன் ஆகிய இருவரையும் பணியிடைநீக்கம் செய்து மாவட்ட இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.