காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45ஆயிரம் கன அடி வீதமாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீராலும், தொடர் மழையாலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 30ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 45ஆயிரம் கன அடி வீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகள், நீர்வீழ்ச்சிகளை மூடியபடி செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சின்னாற்றில் இருந்து கோத்திக்கல் வழியாக மணல் திட்டு வரை மட்டுமே பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவிக்கப்பட்டுள்ளது.