ரயில் பயணிகளுக்கான சேவையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், ஒரு வாரத்திற்கு இரவு நேரத்தில் மட்டும் முன்பதிவு இயங்காது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் இந்திய ரயில்வே வழங்கும் பல சேவைகளை இரவு 23.30 மணி முதல் காலை 5.30 மணி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது. டிக்கெட் முன்பதிவு, நடப்பு முன்பதிவு , டிக்கெட் ரத்து மற்றும் விசாரணை சேவைகள் உட்பட அனைத்து சேவைகளும் 20ந் தேதி வரை தினசரி 6 மணி நேரம் நிறுத்தப்படும்.
கொரோனா காரணமாக சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால், இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ரயில்வேத்துறை மேற்கொண்டுவருகிறது.