விழுப்புரம் அடுத்த தளவானூர் தென்பெண்ணையாற்றில் உடைந்த தடுப்பணையை வெடிவைத்து தகர்க்கும் பணி தோல்வியில் முடிந்தது. உடைந்த தடுப்பணை கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மற்றும் காற்று வெளியேறும் துவாரங்களில் 100 ஜெலட்டின் குச்சிகளுடன், 200 டெட்டனேட்டர் குச்சிகளை இணைத்து வைத்து வெடிக்கவைக்கப்பட்டது.
ஆனால் முறையாக துளையிட்டு, தேவையான அழுத்தத்துடன் வெடிபொருட்களை பொருத்தவில்லை என்று கூறப்படும் நிலையில், வெடித்த பின்பும் தடுப்பனை சிதறாமல் அப்படியே நின்றது.
பல மணி நேர உழைப்பு தோல்வியில் முடிந்தது அதிகாரிகளை விரக்திக்குள்ளாக்கியது. இருப்பினும் திங்கட்கிழமை கட்டுமானங்களில் முறையாகத் துளையிட்டு வெடி பொருட்களைப் பொருத்தி வெடிக்கவைக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.