ராமநாதபுரத்தில் பாரத் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்திற்குள் நேற்று இரவில் கடப்பாரையுடன் புகுந்த நபர், இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளான். அந்த ஏடிஎம் மையம், எஸ்பிஐ வங்கி கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலர்கள் ஏடிஎம் மையம் இருந்த பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த ஏடிஎம் மையத்திற்கு காவல் துறையினர் வருவதற்கு முன் கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொள்ளையடிக்க முயன்றவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.