டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கழனிகளில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட உழவர் பெருமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ராஜாகுப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், அவர்களுக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
தொடர்ந்து, மாருதி நகரில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் வசிப்பதற்கான இலவச நிரந்தர வீட்டு மனை பட்டாக்களையும் முதலமைச்சர் வழங்கினார். ஆடூர்அகரம் பகுதிக்குச் சென்ற முதலமைச்சர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு, அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் புத்தூர் கிராமத்தில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டலின் நேரில் பார்வையிட்டு, விவசாயிகள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கனமழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 13ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தரங்கம்பாடி அருகேமழை நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்ட கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
நாகை மாவட்டம் கருங்கன்னி, அருந்தவம்புலம் ஆகிய இடங்களில் விளைநிலங்களை பார்வையிட்ட முதலமைச்சரிடம், விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை எடுத்து காண்பித்தனர். மேலும், கனமழை காரணமாக வீடுகளை இழந்த பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். நாகை மாவட்டத்தில் மொத்தம் 25ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும், பயிர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
கடலூர் மாவட்டத்தில் ராஜாகுப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், அவர்களுக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கி, ஆடூர்அகரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தூர் கிராமத்தில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டதோடு, கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பிலும் ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம் கருங்கன்னி, அருந்தவம்புலம் ஆகிய இடங்களில் விளைநிலங்களை பார்வையிட்ட முதலமைச்சரிடம், விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை எடுத்து காண்பித்தனர்.
தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதோடு, பயிர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.