சிவசங்கர் பாபாவின் கைரேகைப் பதிவை வைத்து அவருடைய ரகசிய அறையை திறந்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா, தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, பள்ளியில் இதுவரை திறக்கப்படாமல் இருந்த சிவசங்கரின் கைரேகை பதிவு இருந்தால் மட்டுமே திறக்கக்கூடிய அறையை இன்னும் ஓரிரு நாளில் திறந்து, ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக, சிபிசிஐடி போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 4 ஆண்டுக்கு முன் அப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஒருவர் கொடுத்த புகாரில், சிவசங்கர் மீது சிபிசிஐடி போலீசார் 4ஆவது போக்சோ வழக்கினை பதிவு செய்துள்ளனர்.