சென்னை மற்றும் புறநகரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளின் காட்சிகளை பருந்து பார்வையில் இப்போது காணலாம்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்துள்ள கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூர், காகிதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாராயணபுரம் ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீர் பல இடங்களில் 4 அடி முதல் 5 அடி வரை சூழ்ந்து இருப்பதால் இயல்புநிலை முடங்கியுள்ளது.
நாராயணபுரம் ஏரிக்கு வரும் உபரி நீர் கால்வாயை ஆக்கிரமித்து பல வீடுகளும் அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டதால் தான் இந்த பகுதி ஒவ்வொரு மழைக்காலத்திலும் இவ்வாறு பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
2015-ம் ஆண்டு பெருவெள்ள பாதிப்பின் போதே, இந்த நீர் வழித்தடங்களை முறைபடுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை தற்போதும் தொடர்கிறது.