9 மாவட்டங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கான வார்டு மறுவரையறைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கான வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கீழ் செயல்படும் வார்டு மறுவரையறை ஆணையம் மேற்கொண்டு வந்தது.
வார்டு மறுவரையறை குறித்த இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளுக்கான வார்டு மறுவரையறைப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.