மழை காரணமாக ஏற்பட்ட பேரிடரிலிருந்து மக்களை மீட்பதற்காக 19 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 11 குழுக்களும் ஆந்திராவில் 5 குழுக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றர். இதில் இரண்டு குழுக்கள் புதுச்சேரிக்கு விரைந்துள்ளன. விடாது பெய்த அடைமழையால் சென்னை நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை படகுகள் மூலம் மீட்கும் முயற்சியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து அதன் அடிப்படையில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன