பாலாற்றில் நொடிக்கு 35 ஆயிரம் கன அடி வெள்ளம் பாய்வதால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், தமிழகத்தின் திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனுடன் திருமுக்கூடலில் வேகவதி, செய்யாறு ஆகியவற்றில் வரும் நீரும் சேர்ந்ததால் செங்கல்பட்டு பாலாற்றில் நொடிக்கு 35 ஆயிரம் கன அடி வெள்ளம் பாய்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.